திரும்பவும் திருநெல்வேலி,தப்பித்த திண்டுக்கல் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…திரைப்படத்தின் பெயர் போல செய்தியின் தலைப்பு உள்ளது

ஆம் தலைவா…ஊரக வளர்ச்சித்துறை போடும் இடமாறுதலை திருநெல்வேலியில் பணியாற்றுவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அப்படி யார் அவர்கள் ஒற்றரே..

உதவி இயக்குநராக பணிபுரிந்த குரூப் 1 அதிகாரி,அங்கு நடந்த நிகழ்வுகளால் இடமாற்றம் செய்யப்பட்டார்.

பல கட்ட போராட்டமும் நடைபெற்றதே ஒற்றரே…

ஆமாம் தலைவா.. இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்டத்தில் பணியில் சேராமலே,தான் பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கே உதவி திட்ட அலுவலராக வந்துள்ளார்.

அதற்காகத்தான் இந்த தலைப்பா ஒற்றரே…

அவர் மட்டுமல்ல, தற்போதைய இடமாறுதல் உத்தரவில் உள்ள உதவி திட்ட அலுவலரும் உச்ச அதிகாரிகள் சிலரை சந்தித்து,இடமாறுதலை ரத்து செய்து விட்டு மீண்டும் திருநெல்வேலி திரும்புவதற்கு தீவிரமாக வேலை செய்கிறாரம்.

ஆளும் கட்சியினரின் சிபாரிசு அல்லது தமிழக அரசு உச்ச அதிகாரிகளின் ஆதரவு போன்றவற்றால் மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறார்களா ஒற்றரே…

அதேவேளை, திண்டுக்கல் உதவி இயக்குநர் பதவிக்கு வருவதற்கு பணப்பசி அதிகம் உள்ள அதிகாரி ஒருவர் முழு முயற்சி எடுத்தாராம். நல்லவேளை, வேறொருவர் அந்த இடத்திற்கு வந்துள்ளதால் திண்டுக்கல் தப்பித்தது என கூறி  விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கோவிந்தபுரம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!