என்ன ஒற்றரே…அதிர்ச்சி தகவலா.
இல்லை தலைவா…ஆச்சர்ய தகவல். நேர்மையான ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் பற்றி தகவல்.
யாரு ஒற்றரே அவர்…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒன்றியத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லூயிஸ் என்பவர் தான் அவர்.
அங்கு அப்படி என்ன நடக்கிறது ஒற்றரே…
சரியான பில்லை ஒத்துக்கொள்வார். தேசியமயமாக மாறிவிட்ட கமிசனை யாரிடமும் வாங்காதவர். அதனால், இவருக்கு கீழே பணியாற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கமிசன் பெற முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளனராம்..
நல்லவர் பொருட்டு பெய்யும் மழை என்பதற்கு உதராணமாக லூயிஸ் உள்ளார் என கூறும் ஒற்றரே…
சரியாக சொன்னிங்க தலைவா…லூசிஸ் அவர்களின் நேர்மைக்கு ஒரு ராயல் சல்யூட் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.