புதுக்கோட்டையில் மாநில செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

நாள்: 13.9.2025 (சனிக்கிழமை)

இடம்: ரோட்டரி ஹால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம், புதுக்கோட்டை

நேரம் முற்பகல் 11.00 மணி

அன்புடையீர் வணக்கம்,

மாநில சங்கத்தின் கூட்டம் செயற்குழு மேற்கண்டவாறு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்க உள்ளதால் அனைத்து மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொருள்

1 மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் நடத்துதல், சங்க வளர்ச்சி தொடர்பாக விவாதித்தல்

2. மாநில நிர்வாகிகளில் சில பதவியிடங்கள் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்தல்

3. சென்னை உயர் அலுவலர்கள் சந்திப்பு மற்றும் ஓய்வூதியக் குழு தலைவர் சந்திப்பு குறித்து பேசுதல்

4. மாவட்ட, மாநில நிர்வாகிகளால் கொண்டு வரப்படும் இதர பொருள் குறித்து விவாதித்தல்.

5. மாநில பயிற்சி கூட்டம் நடத்துதல் தொடர்பாக நடைபெறும் என

மாநில தலைவர் பாலசுப்பிரணியனும், சி.செல்லப்பாண்டி, (மாநில பொதுசெயலாளர் ) இருவரும் இணைந்து அறிவித்து உள்ளனர்.

மாநில பொருளாளர் பத்பநாபன் செயற்குழு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து செய்து வருகிறார்.

Also Read  கல்யாணிபுரத்தில் களமிறங்கிய ஊராட்சி தலைவர்