விடுமுறை நாளில் கிராமசபை – தேதி மாற்றிட ஆணையருக்கு வேண்டுகோள் கடிதம்

பெறுநர்:-ஆணையர்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை

மதிப்புமிகு ஐயா

பொருள்:கிராம சபை-அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜையன்று வருவது-மாற்றுதேதியில் நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டுதல்-சார்பாக

பார்வை:-அரசு விடுமுறை அரசிதழ்

 

வணக்கம்.எதிர்வரும் அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று கிராம சபைகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் இவ்வாண்டு அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியானது இந்துக்கள் பண்டிகையான ஆயுதபூஜை அன்று வர உள்ளது..பெரும்பான்மையான பணியாளர்கள் அக்டோபர்-01 சரஸ்வதி பூஜையும் வெகுவிமரிசையாக கொண்டாடிவிட்டு அக்டோபர்-02 ஆயுத பூஜையும் கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளதால் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது.எனவே ஐயா அவர்கள் அருள்கூர்ந்து பெரும்பான்மையான பணியாளர்களின் வழிபாட்டு உணர்வுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அக்டோபர்-02 காந்தி ஜெயந்தி கிராம சபையை வேறு ஒரு வேலை நாளில் நடத்திக்கொள்ள ஆணை பிறப்பித்திட கனிவுடன் வேண்டுகிறோம்

கனிவுடன்,

 தலைவர்,                                    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்.

Also Read  ஊராட்சிக்கு ஒரு மலிவு விலை மருந்தகம்