ஊரக வளர்ச்சித்துறை – முடிவுற்ற பாலங்கள்,கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்

சென்னை

தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்கண்ட முடிவுற்ற கட்டிடங்கள்,பாலங்களை திறந்து வைத்தார்.

2 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்

கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம்

66 புதிய பள்ளிக் கட்டடங்கள்

4 புதிய நூலகக் கட்டடங்கள்

49 பொது விநியோகக் கடைகள்

26 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்

25 உணவு தானிய சேமிப்பு கிடங்குகள்

45 ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள்

16 கிராம செயலகக் கட்டடங்கள்

84 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள்

3 சமூகநலக் கூடங்கள்

மதுக்கூரில் நேரடி நெல் விற்பனை மையக் கட்டடம்

3 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள்

2 மகளிர் சுய உதவிக் குழு கட்டடங்கள் மற்றும் 2 பாலங்கள்

பணி நியமண ஆணை

ஊரக வளர்ச்சி துறையில் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 818 சாலை ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமை செயலாளர் முருகானந்தம் இஆப, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் துறை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி இஆப, ஊரக வளர்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Also Read  புஞ்சைகாளக்குறிச்சி ஊராட்சி - கரூர் மாவட்டம்