அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் என்ன? -ஒற்றர் ஓலை

காலை முதலே பரபரப்பா ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி சம்மந்தப்பட்ட இடங்களில் அதிரடியாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே அமைச்சர் சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாத்துறை சோதனை செய்ததே ஒற்றரே..

அதன் தொடர்ச்சியாக சோதனை நடைபெற வாய்ப்பு உள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மனைவிக்கு இடம் ஒதுக்கிய பிரச்சனையின் தொடர்ச்சி என்பது முதல் காரணம் தலைவா…

இரண்டாவது என்ன ஒற்றரே..

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் தொடர்ச்சி என இரண்டாம் காரணத்தை பத்திரிகையாளர் மட்டத்தில் பேசுகிறார்கள் தலைவா..

வேறு காரணம் உண்டா தலைவா…

இப்போதைய துறையில் மத்திய அரசு வழங்கும் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அமலாக்கத்துறைக்கு சில ஆதார ஆவணங்களை வழங்கி உள்ளதாக சொல்கிறார்கள் தலைவா..

உண்மையாகவா ஒற்றரே…

பத்திரிகையாளர்கள் பேசும் மூன்றாவது காரணம் இது தலைவா. அண்ணாமலை சமர்பித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை செய்வதாகவும் சொல்கிறார்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் - ஒற்றர் ஓலை