சொந்த ஊரில் பணியாற்றலாமா ஊராட்சி செயலாளர்?

ஊரக வளர்ச்சித்துறை

தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் நிதி நிலை நிறைந்தாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் குறுநில மன்னர்களாக நீண்ட நெடுங்காலமாக பணியில் இருந்து வருகின்றனர்.

அரசு பணியாளர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் போராடி படிப்படியாக பெற்று வருகின்றனர். ஆனால்,பணி இடமாறுதல் என்றால் மட்டும் அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.

ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையிலான தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பலவகை போராட்டத்திற்கு பிறகு, மூன்றாண்டுக்கு மேல் பணியாற்றும் அனைவருக்கும் கலந்தாய்வுடன் இடமாறுதல் என்ற அரசாணை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் வெளியிட்டார்.

அந்த ஆணையை தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டம் மட்டுமே முழுமையாக அமல்படுத்தி உள்ளது. தற்போது,அரியலூர் மாவட்டம் முழுமையான இடமாறுதல் கவுன்சிலிங் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சொந்த ஊர்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஊராட்சி பதவியில் இருந்த தலைவர்களால் ஊராட்சி செயலாளர்கள் நியமிக்கப் பட்டு வந்தனர். அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே, சொந்த ஊரில் எந்த ஊராட்சி செயலாளரையும் பணியாற்ற அனுமதிக்க கூடாது. பெரும்பான்மை ஊராட்சிகளில் ஊராட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் முக்கிய பங்காற்றும் செயலை செய்கின்றனர்.

Also Read  சேதுராப்பட்டி ஊராட்சி - திருச்சி மாவட்டம்

யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக் கூடாது என்பதை வரை ஊராட்சி செயலாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இன்னும் ஒராண்டிற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

ஆணையர் அவர்களுக்கு வேண்டுகோள்…இந்த ஊரக வளர்ச்சி வளர்ச்சி துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறீர்கள்.சொந்த ஊரில் ஊராட்சி செயலாளர் பணியாற்ற கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதுவே, ஆகப்பெரும் ஜனநாயகத்தின் அடிப்படையாக அமையும். 

நிச்சயம் உத்தரவிடுவார் என தமிழக மக்களோடு நமது இணைய தளத்தின் சார்பாகவும் எதிர்பார்க்கிறோம்.