திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மற்றொரு பாராட்டு கடிதம்

பா.பொன்னையா இஆப

நமது செய்தி இணைய இதழுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அவர்கள் செய்த வரலாற்று செயல்கள் பற்றி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

சில தகவல்களை மட்டுமே செய்தியாக்கி வருகிறோம்.

இதோ…மற்றொரு குரல்

Sir அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் *திட்ட இயக்குநராக* பணிபுரிந்த காலத்தில்,

NREGP & RLEGP திட்டம்.

வேலைக்கு உணவு திட்டத்தில் பணிபுரிந்த பணியார்களுக்கு வழங்கப்பட்ட,*அரிசி & கோதுமை* பல *”டன்”* கணக்கில் நிலுவை சுட்டிக்காட்டி பல்வேறு அலுவலர்களுக்கு “தணிக்கை தடை” எழுப்பப்பட்டதால்,

பணிஓய்வு தாமதம் மற்றும் பணிக்கொடை கிடைப்பதில் தாமதம் இருந்த நிகழ்வுகளுக்கு,முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தடைகளையும் நீக்கம் செய்து பல்வேறு அலுவலர்கள் நிம்மதியுடன் பணிஓய்வில் செல்வதற்கு அக்காலத்திலேயே சாதித்தும், செய்தும் முடித்தவர்.

அந்த மாதிரியான ஒரு நிகழ்வுகள், திண்டுக்கல் மாவட்டத்தில்,நினைத்து கூட பார்க்க இயலவில்லை.

அப்போது இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர், மரியாதைக்குரிய திருமதி வாசுகி மேடம் அவர்கள்.

சார் பார்த்து எடுத்த அலுவல் ரீதியான எந்த ஓர் முடிவிற்கும், மறுப்பு தெரிவித்ததே இல்லை.

பல்வேறு நற்செயல்களில் இதுவும் ஓர் சாட்சி…

இந்த தகவலை எழுதியவரின் எழுத்து நடையில் அப்படியே வெளியிட்டு உள்ளோம்.

Also Read  திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்