முகவரியற்ற கடிதம்
ஊரக வளர்ச்சி துறையின் மதிப்புமிகு ஆணையர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இழிசெயல் செய்த அந்த மலிவான நபர்களின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரக வளர்ச்சி துறையின் அனைத்து நிலை பணியாளர்களின் நலனிற்காகவும், துறை வளர்ச்சிக்காகவும் அனுதினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் அப்பழுக்கற்ற ஆற்றல் மிக்க ஆணையரை ஓர் முகவரியற்ற கடிதத்தால் முடக்கிவிட முடியாது..
ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களின் நம்பிக்கையாக திகழும் ஓர் நல்ல அலுவலர். எவ்வித பாகுபாடுமின்றி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிதரும் அனுபவம் மிக்க ஆணையரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைத்த குறுமதியாளர்களின் எண்ணத்தை இந்த துறை என்றும் ஏற்றுக்கொள்ளாது.
தூய்மை பணியாளர்கள் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் மற்றும் அலுவவர்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து நிறைவேற்றித்தரும் மதிப்புமிகு ஆணையரை தவறாக சித்தரித்த தறுக்கர்களின் செயல்பாட்டினை வன்மையாக கண்டிக்கிறோம்.
க.பாலசுப்பிரமணியன் மாநில தலைவர்.
சி.செல்லபாண்டி . மாநில பொதுச் செயலாளர்.
பெ.பத்மநாபன் மாநில பொருளாளர்
மாநில மையம்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்.