உள்ளூரில் ஊராட்சி செயலாளர் பணிபுரியலாமா? – ஒற்றர் ஓலை

என்ன செய்தி ஒற்றரே…

ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் அவர்களின் சொந்த ஊராட்சியில் பணிபுரிவதால் பல நடைமுறை சிக்கல் வருகிறது தலைவா..

ஆமாம் ஒற்றரே…தனக்கான ஒரு கூட்டத்தை உருக்குவாக்கி அதிகாரம் செலுத்துவது பரவலாக நடக்கிறது.

ஆமாம் தலைவா…ஊராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது வரை தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.அதனால், சொந்த ஊராட்சியில் ஊராட்சி செயலாளரை பணியாற்ற அனுமதிக்க கூடாது.

அதில் விதிவிலக்கு வேண்டுமா ஒற்றரே…

கண்டிப்பாக வேண்டும் தலைவா…மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெறும் வயதில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கலாம்.

சரியாக சொன்னீர்கள் ஒற்றரே..

அதே ஒன்றியத்திற்குள் வேறொரு ஊராட்சியில் பணிபுரிய செய்யவேண்டும்.கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் நடக்கும் போது இதனை முக்கிய விதியாக பயன்படுத்த வேண்டும்.அனைத்தும் அறிந்த ஆணையர் அவர்கள்  தக்க முடிவை எடுப்பார் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  ஊராட்சி செயலாளர்கள் ஜாக்கிரதை - ஒற்றர் ஓலை