என்ன நடக்கிறது ஒற்றரே…
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி என்பவருக்கும்,ஊராட்சி செயலாளர் கெளசல்யா என்பவருக்குமான பிரச்சனை ஆர்பாட்டம் வரை வந்துள்ளது.
பிரச்சனை என்னவானது ஒற்றரே…
வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதியின் இடமாறுதலுக்கு காரணம் ஊராட்சி செயலாளர் கெளசல்யா தான் என நினைத்து, தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் மூலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கெளசல்யாவை பணியிடை நீக்கம் செய்துவிட்டனர் தலைவா..
ஒரே துறையில் அலுவலர்களுக்குள் நடக்கும் சண்டை சரியா ஒற்றரே…
அதாவது பரவாயில்லை…வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆளும் கட்சியின் ஒன்றிய செயலாளர் உதவுவதாக தகவல். ஆர்பாட்டத்திற்கு நாகை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொள்ள கூடாது என ஆளும் கட்சியுனர் அச்சுறுத்துவதாக கூறுகிறார்கள் தலைவா…
ஊரக துறையினர் சண்டையில் அரசியல்வாதிகள் குழப்பம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா ஒற்றரே..
ஆமாம் தலைவா…ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக திங்கட்கிழமை நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதில் இருந்தும் ஊராட்சி செயலாளர்கள் வர உள்ளார்களாம்.
என்ன தான் முடிவு ஒற்றரே…
யார் மீது தவறு என்பதை கண்டறிந்து இந்த பிரச்சனைக்கு ஆணையர் அவர்கள் தான் தீர்வு காண வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.