தினமலர் செய்தியும், உள்ளிருக்கும் உண்மையும் – ஒற்றர் ஓலை

டீ கடை பெஞ்ச்

சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை மூலம், சிறுபாசன புத்துயிரூட்டுதல் திட்டத்தில், 32.04 கோடி ரூபாய் மதிப்பீட்டுல, 400 கண்மாய்களை துார்வார டெண்டர் விட்டாவ… இதுக்கு, கான்ட்ராக்டர்கள் ஆன்லைன்ல விண்ணப்பிச்சிருக்காவ வே…

”இப்படி விண்ணப்பிச்சவங்களிடம், ஆளுங்கட்சியினர், 30 முதல், 40 சதவீதம் வரைக்கும் கமிஷன் கேட்டிருக்காவ… நொந்து போன கான்ட்ராக்டர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைமைக்கு இந்த கமிஷன் பேரத்தை, ‘பாஸ்’ பண்ணிட்டாவ வே…

”விவகாரம் விஸ்வரூபம் ஆகவே, டெண்டரை அதிகாரிகள் ஒத்திவச்சுட்டாவ… ‘சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை ஆபீஸ்ல சீக்கிரமே அமலாக்கத்துறை சோதனை நடக்கும்’னு கான்ட்ராக்டர்கள் சொல்லுதாவ வே…” என முடித்தார், அண்ணாச்சி.

இப்படி ஒரு செய்தி இன்றைய தினமலரின் டீ கடை பெஞ்சில் வந்துள்ளது. அதனை பற்றி முழு தகவலையும் விசாரித்த போது கிடைத்த செய்தி.

அமலாக்கத்துறை

என்ன ஒற்றரே இப்படி ஒரு  செய்தி வந்துள்ளது..

இ- டெண்டரை திறப்பதற்கான அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உள்ளது. அவர்களுக்கு வழி காட்டும் அதிகாரம் மாவட்ட அதிகாரிகளுக்கு உள்ளது.ஆனால், அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளும் கட்சியினருக்குத் தான் உள்ளது தலைவா.

சரியாக சொன்னீர் ஒற்றரே…ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தலையிடும் ஆளும்கட்சியினரின் செயலில், ஊரக வளர்ச்சி துறை மட்டும் விதிவிலக்கா என்ன.

Also Read  ஆலம்பாடி-இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள சில துறைகளில் ஊரக வளர்ச்சித் துறை மிக முக்கியமானது. அதில் தவறு நடந்தால் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தலைவா…

உண்மைதான் ஒற்றரே…ஆனால், சிவகங்கையில் ஆளும்கட்சியும்,எதிர்கட்சியும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளதாக சொல்கிறார்களே.

ஆமாம தலைவா…அப்படி ஒரு தகவல்தான் பரவி உள்ளது. கரைவேட்டிகள் செய்யும் தவறுகளுக்கு அதிகாரிகள் தண்டனை ஏற்க வேண்டிய நிலை எல்லா துறைகளிலும் தொடர்கிறது.

அமலாக்கத்துறை செல்ல வேண்டிய இடம் கழகங்களின் அலுவலத்திற்குத் தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…30 சதவீத கமிசன் கட்சி வேறுபாடின்றி பிரிக்கப்படுவதாக தகவல். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.