இடியாப்ப சிக்கலாக மாறுமா உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்ந மே மாதம் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மீதம் உள்ள மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என தெரியவில்லை.கொரொனா முடிந்து எப்யோது தேர்தல் நடைபெறும் எனவும் தெரியவில்லை.

வரும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம்் முதல் வாரத்திற்குள் கட்டாயம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தாகவேண்டும்.

அதற்குள் மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும்,அனைத்து மாவட்டங்ளிலும் பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி தேர்தல் நடைபெறவேண்டும்.

27 மாவட்டங்களில் ஊரக தேர்தல் முடிந்து ஒரு வருடத்தை நெருங்கப்போகிறது. தேர்ந்தெடுக்கட்டவர்களின் பதவிக்காலம் ஐந்து வருடம்.

ஒரு ஆண்டு கழித்து நடைபெறப்போகும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட போகிறவர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

அப்படியெனில் இனி தமிழகத்தில் கட்டாயமாக இரண்டு கட்டமாகத்தான் தேர்தல்  நடைபெறுவது நடைமுறையாகுமா?

இப்படி பலகேள்விகளுக்காள பதிலை மூத்த பத்திரிகையாளர்கள்,வழக்கறிஞர்கள்,உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டு விரைவில் செய்தியாக வெளியிட உள்ளோம்.

Also Read  உள்ளாட்சியில் பினாமி அதிகாரம்-அரசு நடவடிக்கை