ஓவர் ஆட்டம் போடும் ஒன்றிய செயலாளர்கள் – ஒற்றர் ஓலை

ஆளும்கட்சியினரின் ஆட்டமா ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் கூட அடக்கி வாசிக்கிறார்கள். ஆனா..கட்சி பொறுப்பில் இருக்கும் வட்டம்,ஒன்றியம் என அவர்கள் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமா ஒற்றரே..

ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்வதில் தமிழ்நாடு முழுவதும் தலையிடுகிறார்கள் தலைவா…பல ஒன்றியங்களில் பணமே இல்லை என்றாலும் புதிய புதிய வேலைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என உத்தரவுகள் போடுகிறார்களாம்.

அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அல்லவா மாட்டிக்கொள்வார்கள் ஒற்றரே…

ஆமாம் தலைவா..இதுபோல கடந்த ஆட்சியில் நடைபெற்றதால், தண்டனை பெற்ற பல அதிகாரிகள் கண்ணீரோடு காலத்தை கழிப்பதை காணமுடிகிறது.ஆளும்கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து இடமாறுதல் மற்றும் விருப்ப ஓய்வு கேட்கும் நிலை உள்ளது.

அவர்களின் அத்துமீறல் பற்றிய ஒரு உதாரணம் கூறுங்கள் ஒற்றரே…

திண்டுக்கல் மாவட்டத்தில் வில்லுக்கு பெயர் போன ஒரு ஒன்றிய செயலாளர் ஆடும் ஆட்டம் பற்றி மாவட்டமே சொல்கிறது. 10,20. சதவீத கமிசன் இல்லை என்றால் அணுவும் அசையாதாம்.ஆளும்கட்சியை வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கும் வேலையை இவரை போன்றவர்களின் நடவடிக்கையே செய்து முடித்து விடும் கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கூடலூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!