நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஊராட்சி செயலாளர்களுக்கு 3400 ஓய்வூதியம் என அறிவித்தாரே தெரியுமா மன்னா?
ஆம் ஒற்றரே..சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களோடு சேர்த்து அறிவித்தாரே அதுதானே சொல்ல வருகிறீர்?
ஆம் மன்னா..அந்த அறிவிப்பை ஊராட்சி செயலாளர்கள் எதிர்க்கிறார்களாம்.ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை பிப்ரவரி-9 முதல் தொடங்கப்போகிறார்களாம் மன்னா..
ஏன் ஒற்றரே ரூ 1400 ஏற்றியுள்ளதனை வரவேற்கத்தானே வேண்டும்?எதற்காக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்?
மன்னா சேதியே வேறு..சத்துணவு அங்கன்வாடி பணியாளரெல்லாம் பகுதிநேர பணியாளர்.சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ளனர்.ஆனால் ஊராட்சி செயலாளர் காலமுறை ஊதியத்தில் 2018 முதலே உள்ளார்களாம்..அதுவும் முழுநேர பணியாளர்களாம்.இரண்டு பேருடைய அடிப்படை ஊதியம் ஒரு மடங்கு கூடவாம்..
அப்படி சொல் ஒற்றரே..இது எப்படி சாத்தியம்..அவங்க சொல்றது நியாயம்தானே?
ஆம் மன்னா.அதனால்தான் வரும் 9 ம் தேதி கடுமையான்தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.கடந்த போராட்டத்தில் 7600 பேர் கலந்துகொண்டதாக சங்க கணக்கு இருக்காம்.ஆனால் அரசாங்கத்துக்கு புள்ளிவிபரம் கொடுத்த மாற்று சங்க அதிகாரிகள் புள்ளிகளை குறைத்து குறைத்து கொடுத்தனராம்..
அப்படித்தான் சேதி வந்தது ஒற்றரே.புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அதிகாரி ஊராட்சி செயலாளர் யாருமே போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என புள்ளிவிபரம் கொடுத்துள்ளார்.ஆனால் பிடீஓக்கள் 130 க்கும் மேற்பட்டோருக்கு சம்பள பிடித்தம் செய்துள்ளதும் வந்துள்ளது..
ஆம் மன்னா..இம்முறை சங்கத்தின் சார்பாக தனி டீம் போட்டுவிட்டார்களாம்.யாரும் ஏமாற்ற முடியாதாம்.
ஒற்றரே தெருவெங்கும் ஒரே வால்போஸ்டர் பேனர்,டீவியை போட்டால் ஊராட்சி செயலாளர் போராட்டம் என வருகிறதே பார்த்தீரா?
ஆம் மன்னா..இதுமட்டுமல்ல.போன முறை போராட்டத்தில் கலந்துகொள்ளாத 1800 பேரை கணக்கெடுத்து அவர்கள் வீட்டுக்கே சென்று விடுப்பு கடிதம் பெறவும்,அங்கேயும் வர மாட்டோம் என்பவர்களை காலைபிடித்து கூப்பிடவும் மாநில தலைமை உத்தரவு கொடுத்துள்ளதாம்.
அப்படியா ஒற்றரே.சரி போராடுவது அவர்கள் உரிமை.போராட்டத்துக்கு அதிகாரிகள்தான் சப்போர்ட் செஞ்சி உத்தரவு போடனும்..நீ் போய் பரிசை வாங்கிச்செல்..நான் வருகிறேன்..































