ஊராட்சிகளில் வரி நிர்ணயம் ,சதுரடியில் குழப்படி – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே குழப்படி செய்தியோடு வந்துள்ளீர்கள்.

ஆமாம் தலைவா…பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் வீட்டின் வாடகைக்கு ஏற்ப வீட்டுவரியை நிர்ணயம் செய்துள்ளனர். வீட்டின் அளவு பற்றிய சதுரடியை கூடுதல்,குறைவாக என பதிவேற்றி உள்ளனர்.

இப்போது என்ன பிரச்னை ஒற்றரே….

அப்போதைய ஊராட்சி நிர்வாகம் வீட்டின் சரியான சதுரடியை அளக்காமல், பெரும்பாலும் கூடுதலான சதுரடியை பதிவேற்றி விட்டனர். இப்போது ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ள சதுரடிக்கான வரியால் பெரும்பாதிப்பு தலைவா…

என்னதான்  தீர்வு ஒற்றரே…

வீடுகளின் அளவுகளை அளந்து சரியான சதுரடியை பதிவேற்றம் செய்யவேண்டும். சதுரடியை அதிகமாக்க மட்டுமே இணைய தளத்தில் வழி உள்ளது.சரியான சதுரடியை பதிவேற்றம் செய்வதற்கான வழியை உருவாக்க வேண்டும் தலைவா…

இந்த செய்தியை சேரவேண்டிய இடத்தில் சேர்ப்போம் ஒற்றரே…

ஆணையரின் உத்தரவை பொதுமக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை உச்ச அதிகாரி மீது அதிருப்தி - ஒற்றர் ஓலை