ஊரக வளர்ச்சித்துறை
ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்ரபாக அதன் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பவதாவது…
வணக்கம். தமிழகமெங்கும் உள்ள 12525 கிராம ஊராட்சிகளில் சொத்து வரி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் ஆண்டு தோறும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் தீவிரமான வரி வசூலிப்பு மாதங்களாக இதுவரை இருந்து வருகிறது. கிராம ஊராட்சியின் சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதை உள்ளன்போடு வரவேற்கிறோம்.
ஊராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் மத்திய, மாநில அரசுத் திட்டங்களை செயல்படுத்தி குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் தற்பொழுது சிறப்பாக நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட ஒரே பணியாளரான செயலாளர் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில் தினசரி வரிவசூல், வார வரிவசூல் என்று அறிக்கைகள் கேட்டு கடுமையான நெருக்கடி கொடுக்கும் அலுவலகங்களாக உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு அறிக்கைகள், தணிக்கைகள் என | நெருக்கடி உள்ள நிலையில் தற்போதிருந்தே வரி வசூல் செய்ய நெருக்கடி |கொடுப்பது ஊராட்சி செயலாளர்களை நிலைகுலையச் செய்து, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இது தவிர வரி வசூல் செய்யும் பொழுது பல்வேறு தவறுகள் இணைய வழி வரிவசூலிப்பு முறையில் உள்ளன. குறிப்பாக 2025-2026ம் நிதியாண்டிற்கான கேட்பு இருமுறை நிர்ணயிக்கப்பட்டதால் உட்கடை |கிராமங்கள், சதுரடிகள், கேட்புத் தொகைகள் நிலையற்று வித்தியாசமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான தீர்வு மாவட்ட அலுவலகங்களிலேயே உள்ளது.
இதுதவிர Automatic Assessment Generation முறையும் இருப்பதால் புதிய வரிவிதிப்பு செய்யவே இயலவில்லை. கிராமங்களில் | குடிநீர் வரி வசூல் செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆங்காங்கே | அரசியல் பிரமுகர்கள் வரியினங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக சொல்லி குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இத்தனை |பிரச்சனைகளை வைத்துக் கொண்டு எந்தவித அதிகாரமும் இல்லாத இலக்குகளை ஊராட்சி செயலாளர்கள் தினசரி வரிவசூல், வாராந்திர வரி வசூல் பூர்த்தி செய்ய வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
எனவே எங்கள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளோடு | Vptax தொடர்பான அலுவலர்களை கலந்துரையாடி தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தகுந்த உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டுகிறோம். மேலும் வரிவசூல் செய்வதற்கு முழுமையான அதிகாரங்களை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கிடவும், தண்ணீர் கட்டண நிலுவை உள்ள இணைப்புகளை உடனடியாக துண்டிப்பதற்கு ஊராட்சி செயலாளர்களுக்கு நேரடியாக அதிகாரம் வழங்கவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
மேற்கண்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் வரை உயர் அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதை உடனடியாக நிறுத்திட தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டுகிறோம். மேலும் எங்கள் அமைப்பின் சார்பாக விடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்பட்சத்தில் அது நிரந்தர தீர்வாக எக்காலத்திற்கும் அமையும் என்பதனையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.