ஊரக வளர்ச்சித்துறை – மாவட்டங்கள் சில பல மண்டலமாக பிரிப்பு

மண்டல இயக்குநர்

சிறிய மாவட்டங்கள் இரண்டு மண்டலமாக( வடக்கு,தெற்கு) அல்லது (கிழக்கு, மேற்கு) ஆக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு உதவி இயக்குநர் பணியாற்றிய இடத்தில் மண்டலமாக பிரிக்கப் பட்டுள்ளதால் ஒரே மாவட்டத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒருவரிடமே ஊராட்சிகள் மற்றும் தணிக்கை இருக்கும் வகையில் பணி அமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆக…இனி, உதவி இயக்குநர் (தணிக்கை) என்ற பதவி தனியாக கிடையாது.

இதன் முதல் நியமனமாக ஊரக வளர்ச்சி துறை தலைமை அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சுந்தர் என்பவர் பதவி உயர்வில் செங்கல்பட்டு தெற்கு மண்டல உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி நிர்வாக மாற்றத்தில் முதல் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் அவர்களுக்கு நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறையில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்