சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம்  ஊராட்சி தலைவி நித்யா நமது “tn.பஞ்சாயத்து செய்திகளுக்காக” நமது நிருபரிடம் அளித்த பேட்டியின் போது.

  எங்களது பகுதியில் இருக்கும் அடிப்படையான சுகாதார வசதி மற்றும் தடையில்லாத குடிநீர் வேணும்.

மேலும் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு  போக்குவரத்து சாலை அமைத்தல், மற்றும் மின் வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதற்காக நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.

எங்களது பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீரை வழங்குவதற்கு, நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம் அதுபோக முதியோர் பென்சன், மாற்றுத்திறனாளிகள் திட்டம், மக்கும் குப்பை, திடக்கழிவு பராமரிப்பு, மற்றும் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் இவைகளை முனைப்புடன் செயல்பட காத்திருக்கிறோம்.

  எங்களது முக்கியமான அம்சமான சுத்தம் சுகாதாரத்தை  அமுல்படுத்துவதே எங்கள் நோக்கம் என்று கூறினார் கிருஷ்ணாபுரம் தலைவி வி.நித்தியா

Also Read  கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி