காலம் தாழ்த்தும் விசாரணை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை

என்ன  செய்தி ஒற்றரே…

ஊரக வளர்ச்சி துறையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பான வழக்கு, துறை ரீதியான புகார்கள் என பல குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை அறிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக விசாரணை அதிகாரி நியமிக்க படுவார் தலைவா..

அது நடைமுறை செயல்தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…அப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விசாரணையை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்களாம். லஞ்ச ஒழிப்பு துறை கூட ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.சொந்த துறை அதிகாரிகள் சூனியம் வைக்கிறார்கள் என சம்மந்தப்பட்ட அலுவலர்கள் புலம்புகிறார்கள்.

அவர்கள் புலம்புவதில் அர்த்தம் உள்ளதே ஒற்றரே…

வாராது வந்த மாமணி போல எங்களுக்கு கிடைத்துள்ள ஆணையர் அய்யா காலகட்டத்தில் அனைவருக்கும் விமோசனம் கிடைத்து வருகிறது. ஆனா,துறையால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரிகள் ஒத்துழைக்க தாமதப்படுத்தி வருவதாக கண்ணீர் விடுகிறார்கள் தலைவா…

அதற்கு என்ன தீர்வு ஒற்றரே…

ஒத்துழைக்காத விசாரணை அதிகாரிகளை மாற்றி,விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.சாமி(ஆணையர்) வரம் கொடுத்தாலும் பூசாரிகள் ( விசாரணை அதிகாரிகள்) கட்டையை போடுகிறார்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

 

Also Read  ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ - ஒற்றர் ஓலை