ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை இடமாறுதல் செய்யவேண்டும் – ஒற்றர் ஓலை

என்ன விசயம் ஒற்றரே…

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையர் உத்தரவு இட்டாரல்லவா..

அது ஏற்கனவே வந்த உத்தரவு தானே ஒற்றரே.

ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை தலைவா..

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு என்ன பிரச்சனை. ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்ய வேண்டும் தலைவா.

சரியா சொன்னீர் ஒற்றரே…அதிலும் சொந்த ஊராட்சியில் எந்த ஊராட்சி செயலாளரையும் பணிபுரிய அனுமதிக்க கூடாது. அப்படி தொடர்ந்து பணியாற்றுபவர்கள் குறுநில மன்னர்களாக மாறிவிட்டனர்.

ஆமாம் தலைவா…அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று மறைமுகமாக அற்கான வேலைகளை தொடார்ந்து செய்கிறார்களாம்.

ஆமாம் ஒற்றரே…அதனால், சொந்த ஊராட்சியில் எந்த ஊராட்சி செயலாளரையும் பணியாற்ற அனுமதிக்க கூடாது. இதற்கான வழிகாட்டு நெறிமுறையை ஆணையர் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்.

உண்மை தலைவா…ஆணையர் உத்தரவை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகளை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் தமிழ்நாடு முழுவதும் அதுபோன்ற அதிகாரிகளை பற்றி செய்தி சேகரித்து அடுத்த சந்திப்பில் கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கருப்பூர் ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்