ஒரு லட்சம்
ஆகஸ்ட் 23ம் தேதி திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், கணிணி இயக்குபவர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து பணியாளர்கள் கூடும் மாநாடு நடைபெற உள்ளது.
ஒரு லட்சம் பேர்களுக்கு மேலாக ஊராட்சி ஊழியர்கள் கலந்து கொள்ளும் கோரிக்கை மாநாட்டு பணி, அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அதற்கான ஆயத்த பணிகளுக்காக ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் சிறப்பு ஆலோசனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.








