என்ன ஒற்றரே…அணுகுண்டு போல தகவலை கூறுகிறீர்கள்.
ஆமாம் தலைவா…அக்டோபர் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் நடைமுறைக்கு கொண்டு வர தலைமை செயலகத்தில் தடபுடலாக பணிகள் நடந்து வருவதாக தகவல்.
இதையாவது நம்பலாமா ஒற்றரே…
எதிர்பார்த்து ஏமாந்து போன அரசு ஊழியர்களின் உள்ள குமுறலை கூறுகிறீர்கள் தலைவா…எனக்கு கிடைத்த தகவலை கூறுகிறேன். 2026 தேர்தலில் அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கியம் என்பதால் ஓட்டு அரசியலுக்காக நடக்கலாம்.
நடந்தால் நல்லது ஒற்றரே…
ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் ஆணையர் அவர்களை மலை போல் நம்புவதாக தனது நிர்வாகிகளிடம் கூறி வருகிறாராம் தலைவா…
எதற்கு ஒற்றரே…
தங்களின் ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பதை ஆணையர் அவர்கள் செய்து தருவார். 12525 ஊராட்சி செயலாளர்களும் அவரை குலதெய்வமாக கொண்டாடுவோம் என கூறி வருகிறாரம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.