பரபரப்பான செய்தியா ஒற்றரே…
ஒற்றை நபர் கிளப்பிவிட்ட செய்தியை நம்பி ஊதி பெரிதாக்கும் வேலையை ஊடகங்கள் செய்து வருவது வெட்ககேடாக உள்ளது.அதை நம்பி உண்மை தெரியாமல் அரசியல்வாதிகளும் அறிக்கை விடுவது அவமானமாக உள்ளது தலைவா…
கொஞ்சம் விவரமாக சொல்லுங்க ஒற்றரே…
சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சியில் உள்ள நாட்டாக்குடி என்ற ஊரில் உள்ளவர்கள் சிவகங்கை நகருக்கு குடியேறி விட்டனர்.அந்த ஊரில் படுகொலை நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட நபர் கஞ்சா பேர்வழியாம். அவருக்கு பயந்தே அனைவருக்கு சிவகங்கை சென்று விட்டனராம் தலைவா..
பிறகு என்ன பிரச்சனை ஒற்றரே…
அதே ஊரில் வசித்து வரும் நபர் கிளப்பிவிட்ட செய்தியை ஊடகங்கள் இஷ்டத்திற்கு செய்தியை வெளியிட்டு வருகின்றனர். 7 குடும்பங்கள் மட்டுமே தற்போது அந்த ஊரில் வசித்து வருகின்றனர். ஊடகங்களோ 5 ஆயிரம் பேர் ஊரை காலி செய்துவருகின்றனர் என செய்தி வெளியிட்டு வருவது எந்த ஊடக தர்மம் தலைவா….
அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் என செய்தி வெளியிட்டு வருகின்றதே ஒற்றரே…
ஊராட்சியில் வசித்து வரும் மற்ற ஊர்காரர்களிடம் பேசினோம். கஞ்சா பேர்வழிக்கு பயந்து ஒற்றை நபர் கிளப்பிவிடும் பிரச்சனை. 5 வருடங்கள் ஊராட்சி தலைவர் அதிகாரத்தில் இருந்த போது அடிப்படை வசிதியை கூடவா நிறைவேற்றவில்லை என்ற சந்தேகம் நமக்கு வருகிறது தலைவா…
அடிப்படை வசதி பிரச்சனை என்றால் உடனடி நடவடிக்கை தேவைதான் ஒற்றரே…
ஆமாம் தலைவா…ஆனா,அந்த ஊரில் உள்ள உண்மையான பிரச்சனையை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். அதுவே ஊடக தர்மம் ஆகும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.