மிக அவசர மருத்துவ உதவி தேவை
விழுப்புரம் மாவட்டம்,முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) சென்னையில் கல்லூரி படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 08-09-2025 அன்று சாலையில் நடந்து செல்லும்போது வாகனம் மோதி 20 அடி தூக்கிவீசப்பட்டு தற்போது மிக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மூளை நரம்புகளில் பலத்த காயங்கள் மற்றும் உடல் முழுவதும் பல கடுமையான காயங்கள் ஏற்பட்டு தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
*மிக ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் தங்களால் இயன்ற தொகையை திரட்டி சிகிச்சை மேற்கொண்டுவிட்ட நிலையில் கூடுதலாக ரூ 15 லட்சம் அறுவை சிகிச்சைக்கு மட்டும் தேவை என்ற நிலை உள்ளபோது வேறு வழியின்றி நமது அமைப்பிடம் நிதி உதவி கோரியுள்ளார்*
இது தொடர்பாக மாநில துணைத்தலைவர் திரு.K.கவிச்செல்வன் சென்று பார்த்தபோது பண உதவி கிடைத்தால் நிச்சயமாக உயிரை காப்பாற்ற முடியும் என தகவல் அளித்துள்ளார்.
உயிரை காப்பது,அதுவும் ஒரு 22 வயது மகளை காப்பது ஊராட்சி செயலர் அனைவரின் கடமை..இதனை செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடம் உண்டு.
எனவே இவ்விசயத்தை நமக்கு ஏற்பட்ட துயராக எண்ணி பின்வரும் எண்களில் உங்களால் இயன்ற தொகை ரூ 500 க்கு குறைவில்லாமல் அனுப்பிவைத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ள நாள் செவ்வாய்கிழமை..எனவே சூழலை உணர்க…
9943392508-நேரு
9750385071-அசோக்குமார்
9943188175-செந்தில்குமார்
9698326033-சசிதரன்
8489945831-முருகன்
9943392506-கவிச்செல்வன்
அன்புடன், அ.ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநில தலைவர்,TNPSA பேரமைப்பு
பணத்தால் வரும் தடையை மனதால் வெல்வோம்
ஒரு நொடி கூட வீணாக்காது இந்த உயிரை காப்பாற்றிட அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.
சிறு துளி பெரு வெள்ளம்…ஒரு அறக்கட்டளை மூலமோ, பெரும் செல்வந்தர் மூலமோ உதவி கிடைப்பதைவிட, நல் உள்ளம் படைத்த அனைவரின் பங்களிப்பே மிகவும் அவசியம்.
முடிந்ததை செய்யுங்கள்…உடனடியாக செய்யுங்கள்…
உயிர் காப்போம்…மனிதம் போற்றுவோம்.
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மகத்தான பணியில் அனைவரும் இணைவோம்.
சம்பந்தப்பட்டவரின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை.
ஜோதிமுருகன்.அ, எடிட்டர், www.tnpanchayat.com