பொன்னையா இஆப
2023 ம் ஆண்டு ஜீலை மாதம் 8 ம் தேதி ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக பதவி ஏற்றார்.
ஊரக வளர்ச்சித்துறையில் 1994ல் பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2017ல் இந்திய ஆட்சி பணியாளராக பதவி ஏற்றார்.
காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். நகராட்சித் துறையின் இயக்குநராக பணியாற்றிய பிறகு தனது தாய் துறையான ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குநராக 2023 ம் பதவி ஏற்றார்.
2024 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு செயலாளராக பணி உயர்வு பெற்று, ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
இரண்டாண்டு
ஊரக வளர்ச்சித் துறையில் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிவும் நிலையில் பொன்னையா இஆப அவர்கள் செய்து வரும் பணிகள் பற்றி பல்வேறு வகையாக அலுவலர்கள் நம்மிடம் பல செயல்களை பகிர்ந்து கொண்டனர்.
தென்மாவட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் ஒருவர் நம்மிடம் பேசியபோது, எங்களின் சம்பள உயர்வு என்பது எங்கள் துறை மட்டுமின்றி,அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி வேண்டும் என்ற நிலையை மாற்றி, அந்தந்த மாவட்ட ஆட்சியரே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்ற மிகப் பயனுள்ள உத்தரவை பிறப்பித்து உள்ளார் என்றார் அவர்.
உதவி இயக்குநராக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறும்போது, பல்வேறு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அதிகாரிகளின் கோப்புகளை முடிவுக்கு கொண்டுவந்து எங்களைப் போன்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து உள்ளார் என்றார்.
பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் நம்மிடம் பேசியபோது, இதுவரை எங்கள் துறையில் பணிபுரிந்த ஆணையர்கள் நிறைவேற்றாத பல்வேறு கோரிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். எங்கள் போராட்ட நாட்களை கூட பணி புரிந்த நாட்களாக கணக்கெடுத்துக்கொள்ள ஆணை இட்டுள்ளார்.எங்கள் துறைக்கு ஆணையர் செய்துள்ள செயல்கள் தனி புத்தகமாக போடும் அளவிற்கு அதிகமானது என்றனர்.
துறைரீதியாக பல்வேறு சிறந்த மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. பொன்னையா இஆப அவர்களை ஆணையராக கொடுத்ததற்கு அரசிற்கு எங்கள் நன்றி என்றனர் நம்மிடம் பேசிய அனைவரும்.
கடைநிலை ஊழியர் தொடங்கி மாநில அளவு அதிகாரிகள் வரை அனைவரின் மனம் கவர்ந்த ஆணையர் பொன்னையா இஆப அவர்களின் பணி மேலும் சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.