மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து அவருக்காக போராட முன்வர வேண்டும்.
வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இந்த நிலை ஒருநாள் வரலாம்.
தனது தற்போதைய நிலையை பற்றி அவர் அனுப்பி உள்ள செய்தி…
பேரன்பிற்குரிய பிரதாபராமபுரம் கிராம ஊராட்சி பொதுமக்களுக்கு வணக்கம்
கடந்த மூன்று மாதங்களாக நமது கிராமத்தில் மணல் குவாரி அமைப்பதை தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது நான் உட்பட 13 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு பிணையில் வெளியில் வந்துள்ளோம். மேலும் தொடர்ந்து நான் உட்பட இரண்டு நபர்கள் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டு இன்று இரவு கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறோம். உள்ளாட்சிகள் இல்லாத இந்த காலத்தில் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் நமது ஊரில் பல்வேறு மக்களுக்கு விரோதமான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் கிராம ஊராட்சி எவ்வாறு இருந்தது என்பதை தாங்கள் அறிவீர்கள். தற்போது என் மீது எண்ணற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.தற்போது என்னையும் என்னுடன் பயணிக்கும் கிராமம் நலன் சார்ந்து சிந்திக்கும் உறவுகளையும் தொடர்ந்து ஆளும் கட்சி வஞ்சித்து வருகிறது. எனினும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நமக்கான காலம் வரும் என்று காத்திருப்போம்.
உள்ளாட்சிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கு நமக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆயுதம் “கிராமசபை”எனவே,பொதுமக்கள் அனைவரும் தவறாது கிராம சபையில் கலந்து கொள்ளவும். மண்ணையும் மக்களையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்..
நாளை நாங்கள் கிராம சபா கூட்டத்தில் பங்கெடுக்க இயலாத வண்ணம் இன்று இரவு கைது செய்யப்படலாம் எனினும் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் ..
இணைந்து பயணிப்போம் நன்றி
என்றும் தங்களுடன்
சிவராசு சாமிநாதன்
தொடரும் பொய் வழக்குகள்..
உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காரணத்தினால் கிராமங்கள் தொடர்ந்து மாநில அரசால் அச்சுறுத்தப்பட்டு வருகிறது..
இவர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் உள்ள பிரதாபராமபுரம் என்ற ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். மக்கள் சேவை செய்பவர்.மத்திய,மாநில அரசுகளின் பாராட்டுக்களை பெற்றவர். இவரைப் பற்றி நமது செய்தி இணைய தளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு உள்ளோம்.