என்ன தகவல் ஒற்றரே…
ஊரக வளர்ச்சி துறையில் பதவி உயர்வில் வரும் உதவி இயக்குநர்களுக்கும், நேரடியாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று உதவி இயக்குநர்களாக வருபவர்களுக்கும் இடையே யூகோ யுத்தம் கால காலமாக உள்ளது தலைவா…
உறவுகளுக்குள் யுத்தமா ஒற்றரே…
ஆமாம் தலைவா…300க்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களில் ஒற்றுமை இல்லாததால்,அவர்களுக்கென தனி சங்கம் இல்லாததால் தங்களுக்கான உரிமைகளை அரசிடம் கேட்டு பெறக்கூட முடியவில்லையாம்.
ஒற்றுமை இல்லையென்றால் வெற்றி என்பது சாத்தியம் இல்லைதானே ஒற்றரே…
சரியாக சொன்னீர்கள் தலைவா…அதனால் தான் தங்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் திட்ட இயக்குநராக உள்ள இஆப அதிகாரிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடியவில்லை.
வேறு தகவல் உண்டா ஒற்றரே…
பெரும்பான்மையான இடங்களில் அரசியல்வாதிகளிடம் அவமானங்களை சந்திக்கும் நிலையே தொடர்கிறது. பாவம் உதவி இயக்குநர்கள் என அனுதாபத்தை காட்டி விட்டு மறைந்தார் ஒற்றர்.