உதவி இயக்குநர்கள் உத்தரவு இடவேண்டும் – ஒற்றர் ஓலை

ஆணையர் உத்தரவை மீறும் அதிகாரிகள் என ஏற்கனவே பேசினோமே ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஊராட்சி செயலாளர்கள் கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதிப்பதில்லை.ஆளும்கட்சியினர் சொல்கிறார்கள் என தன்னை காப்பாற்றுகிறார்கள் பிடிஓக்கள்.

இதற்கு என்ன தீர்வு ஒற்றரே…

ஆணையரின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்ற அறிவுரையை ஒவ்வொரு பிடிஓக்களுக்கும் அந்தந்த மாவட்ட உதவி இயக்குநர்கள் வழங்கவேண்டும்.ஆணையரின் ஆணை செயல்படுத்தும் முழு பொறுப்பு மாவட்ட அதிகாரிக்கு உண்டு தலைவா…

உண்மைதான் ஒற்றரே.பல மாவட்டங்களில் இடமாறுதலில் சிக்கலாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளதாம் ஒற்றரே…

ஆமாம்…உயர்நீதி மன்றம் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் இடமாறுதல் உத்தரவுக்கு தடை விதித்துள்ளதாம். அதனை தொடர்ந்து பல வழக்குகள் பதிவாக உள்ளதாம். இந்த நிலை தொடராமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் இடமாறுதலை உதவி இயக்குநர் கண்காணிக்க வேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  திரும்பவும் திருநெல்வேலி,தப்பித்த திண்டுக்கல் - ஒற்றர் ஓலை