கோரிக்கை மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி மாநாடு நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

உரிமை
குவாட்டரும், பிரியாணியும் இல்லாமல் எந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் கூட்டம் சேர்வதில்லை( நாம் தமிழர் தவிர்த்து).



அரசியல் இயக்கங்களை கடந்து, அரசியல் சார்பற்ற சங்கங்களின் மாநாடு என்பது அரிதிலும் அரிதாகவே நடைபெறும். சில அரசு ஊழியர் சங்கங்கள் மாநாடு, ஆர்பாட்டம் என உரிமைக்காக நடத்தி வருகின்றன.
தனி ஒரு துறை சார்பாக மாபெரும் கோரிக்கை மாநாட்டை ஊரக வளர்ச்சித் துறையினர் இன்று திருச்சியில் நடத்தி காண்பித்து உள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே திருச்சியை நோக்கி வர ஆரம்பித்தனர். ஆண்,பெண் என இருபாலரும் சரிசமமாக கலந்து கொண்டது ஆச்சர்யப்பட வைத்தது.
போராட்ட உணர்வுகள் படிப்படியாக மெளனிக்கும் நிலைக்கு செல்லும் போது, அதற்கு மீண்டும் உயிர் ஊட்டிய உன்னத நிகழ்வை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் திருச்சியில் நடத்திவிட்டார்கள்.
அவர்களின் உண்மையான கோரிக்கைகள் வெல்லட்டும். அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும். போராடினால் மட்டுமே காரியம் நடக்கும்.