சந்திப்பு
தமிழகம்,புதுவை ஆளுநர்கள் போட்டி போட்டிக்கொண்டு மக்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார்கள்.
மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட அமைச்சரவை இருக்க,இவர்கள் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்.
அரசியல் சட்டத்தில் இடமுண்டு என்று விளக்கம் கூட கொடுத்தார்கள்.
ஆனால்…இப்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியும்,புதுவை முதல்வர் நாரயணசாமியும் மட்டுமே மக்களோடு மக்களாக களமாடி வருகிறார்கள்.
கொரொனா எனும் தேசிய பேரிடர் காலத்தில் ஆளுநர்கள் மக்களை நேரடியாக சந்தித்து நம்பிக்கையை விதைத்திட வேண்டாமா…
ஆக…அன்று நடந்தது அரசியல்.ஆளுநர்கள் யாரும் தேர்தலை சந்திக்க மக்களிடம் வரவேண்டிய அவசியம் இல்லை.
இனிமேலாவது…எல்லோரும் இருக்கும் இடத்தில் இருப்பதே ஜனநாயகத்திற்கு நல்லது.































