தேர்வு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இணைய வழியே விண்ணப்பங்கள் செய்து வருகின்றனர்.
நமக்கு கிடைத்த தகவலின்படி, பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் அதிகம் பேர்கள் விண்ணத்துள்ளனர். கடைசி தேதியான நவம்பர் 9ம் தேதிக்குள் மேலும் பல ஆயிரம் பேர்கள் விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ளதாக தகவல் வருகிறது.
மாவட்டரீதியாக இட ஒதுக்கீட்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ளவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வரிசைப்படுத்தப்படுவர்.
அதன்பிறகு, தகுதி அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
முக்கிய செய்தி
- அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்
- மாவட்ட அளவில் காலிப்பணியிடம் கணக்கிடப்படுவதால், அதே மாவட்டத்தை சார்ந்தவர் மாவட்டத்தில் உள்ள எந்த காலிப்பணியிடத்திற்கும் விண்ணப்பிக்காலாம்.தேர்வு பெற்றால், அவருக்கு மாவட்டத்தில் எந்த ஊராட்சிக்கும் பணி அமர்த்தபடலாம்.
- இனி, ஊராட்சி செயலாளர்கள் அதே மாவட்டத்தில் எங்கு வேண்டுமானலும் இடமாற்றம் செய்யபடலாம்.
- மிக குறிப்பாக, இந்த பதவிக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது.
































