ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புவதற்கான அரசாணை. வந்துள்ளது தலைவா..
நானும் பார்த்தேன் ஒற்றரே…அதில் வயது வரம்பு அதிகபட்சமாக 34 என்று உள்ளது. 2019 வெளியிடப்பட்ட ஆணையில் 35 வயதாக இருந்தது. 5 வருடத்திற்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள ஆணையில் 34 வயதாக உள்ளதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வருகிறது.
ஆமாம் தலைவா…பல ஆண்டுகளுக்கு பிறகு நிரப்பட உள்ள நிலையில் விண்ணப்பம் செய்பவர்களுக்கான வயது வரம்பை அதிகப்படுத்த வேண்டும் என கேட்பதில் நியாயம் உள்ளதே..
ஆமாம் ஒற்றரே…கட்டாயம் வயது வரம்பை உயர்த்திட வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் போல, விவசாய குடும்பத்தில் இருந்து அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முதல் நபருக்கு வயது வரம்பை உயர்த்தலாம். திராவிட மாடல் அரசு இந்த கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என நம்பலாம். குறைந்தபட்சம் இரண்டு வருடமாக அதிகப்படுத்திட வேண்டும்.
கண்டிப்பாக தலைவா…நாம் பேசும் இந்த செய்தியை முதல்வரிடம் கொண்டு சேர்ப்பதாக மேலிடத்திற்கு மிக நெருக்கமான ஊடகவியாளரும் உறுதி அளித்துள்ளார்.
நல்லது நடந்தால் சரி ஒற்றரே…அரசு வேலை வாய்ப்பு என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவிடக்கூடாது.
மிகச் சரியாக சொன்னீர்கள் தலைவா. ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடம் நிரப்புவதில் வயது வரம்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு என உரக்க சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.