என்ன ஒற்றரே.. புதிய செய்தியா.
ஆமாம் தலைவா..16 அம்ச கோரிக்கையை வழிவுறுத்தி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி அசத்தி விட்டனர் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை பணியாளர்களும்.
நானும் செய்தி அறிந்தேன் ஒற்றரே…
அரசியல் கட்சிகளுக்கு இணையாக மேடை,இன்னிசை கச்சேரி,பெரிய மைதானம்,50ஆயிரம் பங்கேற்பு என்ற செய்தி சம்மந்தப்பட்ட மேலிடத்தை அடைந்துவிட்டதாக தகவல் தலைவா..
அவர்களின் கோரிக்கை தேர்தலுக்கு முன் நிறைவேறுமா ஒற்றரே…
அதிக வாய்ப்பு உள்ளதாக ஆளும்கட்சி ஊடகத்தில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் கூறினார் தலைவா..ஆட்சியை தக்க வைக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் நிலையில் ஆளும் கட்சியின் தலைமை உள்ளது.
நல்லது நடந்தால் சரி ஒற்றரே…
முக்கியமான கோரிக்கைகள் விரைவில் நடைபெறுவதற்கு வாய்ப்பு. மூன்று கட்ட போராட்டத்திற்கு முன்பே முக்கிய அறிவிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆளும் கட்சிக்கு நெருக்கமான பத்திரியாளர் கூறினார் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.