மாநில சுயாட்சி
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்து வரும் இரண்டு திராவிட கட்சிகளும் மாநில சுயாட்சி பற்றி தொண்டை கிழிய கத்துவார்கள்.ஆனால் , உள்ளாட்சிகளுக்கு அடிப்படை உரிமையை கூட தரமாட்டார்கள்.
உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு எல்லை மீறி உள்ளது. மத்திய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிட்டால், திராவிட பாலகர்கள் வானம் வரை குதிப்பார்கள். அதேவேளை , உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்துவார்கள்.
சுதந்திரம்
அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் என தம்பட்டம் அடிப்பவர்கள், அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளாட்சிகளின் நிலையை அறிந்து வாருங்கள். பஞ்சாயத்துராஜ் சட்டப்படி முழுமையாக உள்ளாட்சி நிர்வாகம் நடைபெறும் மாநிலம் கேரளா.
ஆகவே திராவிட திலகங்களே…இந்த சுதந்திர தினத்தில் இருந்தாவது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குங்கள்.
உடன்பிறப்புகளே…ரத்தத்தின் ரத்தங்களே…உள்ளாட்சியை வாழவிடுங்கள்.தனித்து ஆள விடுங்கள்