ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிசம் ஆணையர் – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை

கடும் கண்டனம்

மனிதருள் மாணிக்கம் போற்றுதலுக்குரிய ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களை இல்லாத பொல்லாத விசயங்களை குறிப்பிட்டு போலியாக ஒரு கடிதம் தயாரித்து அவப்பெயர் ஏற்படுத்த முயன்றுள்ள கயவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

*ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிஷமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒரு செயற்கரிய செம்மலை,பாகுபாடின்றி பயனடைந்து பதவி உயர்வு பல பெற்று சென்றோரெல்லாம் கைகூப்பி,இதயங்கனிந்து வாழ்த்திவரும் இவ்வேளையில்,சேற்றைவாரிப்பூச நினைத்த கயவர்களின் கைங்காரியம் எந்நாளும் கைகூடாது.

சுட்டெரிக்கும் சூரியனை ஒரு விரல்கொண்டு எவரேனும் மறைக்க முடியாது.பார்காக்கும் பகலவனாய் இத்துறையை காத்துவரும் போற்றுதலுக்குரிய ஆணையரின் அம்புகளாய் என்றும் இவ்வமைப்பு பாய்ந்து துரோகிகளின் துர்குணங்களுக்கு முற்றுப்புள்ளிவைப்போம்.

ஜான்போஸ்கோ பிரகாஷ்அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
மாநில மையம்

Also Read  அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையம்