ஒற்றரே…நாம் பேசிய செய்தியின் எதிரொலியா.
ஆமாம் தலைவா..தலைநகருக்கு அருகே உள்ள மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் அமைச்சர் பெயரை சொல்லி ஆட்டம் போடுகிறாராம் என பேசிய செய்தி உச்ச அதிகாரியின் பார்வைக்கு சென்றது.
இறுதியில் அமைச்சர் பெயரை பயன்படுத்தியவருக்கு என்னாச்சு ஒற்றரே…
தலைமை செயலக ஊழியர் என்பதால், அமைச்சரின் பெயரை பயன்படுத்தி அனைவரையும் மிரட்டி வந்துள்ளார். இறுதியில்,வேறொரு ஒன்றியத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் தலைவா..
சென்ற இடம் எப்படி ஒற்றரே…
தொழிற்சாலைகள் இல்லாத,ஆந்திர தேசத்திற்கு மிக அருகில் உள்ள ஒன்றியத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தப்பி்த்தார்கள் தொழிற்சாலை நடத்துபவர்கள். சரியான முடிவு எடுத்த அதிகாரிக்கு நன்றி என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.