வரி வசூல், இடமாறுதல்,ஆளும்கட்சி – ஒற்றர் ஓலை

100 சதவீத வரிவசூலை நிறைய செய்ய ஊராட்சி செயலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களாம் ஒற்றரே…

ஆமாம் தலைவா, பிடிஓக்கள் கொடுக்கும் நெருக்கடியால் கடன் வாங்கி வரிபாக்கிகளை கட்டும் நிலைக்கு ஊராட்சி செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளர். இதுபற்றிய புகார் ஆணையர் வரை சென்றுள்ளதாக தகவல்.

ஆணையர் போட்ட இடமாறுதல் உத்தரவை மதிக்காத சில அதிகாரிகளை பற்றிய செய்தி வருகிறதே ஒற்றரே…

உண்மை தான் தலைவா…மொத்தமாக கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் உத்தரவை பெரும்பான்மையான பிடிஓக்கள் செய்து வருகின்றனர். மாவட்டத்திற்கு சில பிடிஓக்கள் தனது இஷ்டத்திற்கு தனித்தனி இடமாறுதல் உத்தரவை போட்டுவருகிறார்களாம்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பிடிஓ தான் வைத்தது தான் சட்டம் என இடமாறுதல் உத்தரவை செய்கிறாராம். அமைச்சர் சொன்னார், உயர் அதிகாரி சொன்னார் என தனது செயலுக்கு பிறரை துணைக்கு இழுக்கிறாராம் அந்த மலையூர் மம்பட்டியான் பட இயக்குநரின் பெயர் கொண்டவர் தலைவா…

நாம் ஏற்கனவே சொன்னதுபோல, ஆளும் கட்சியினரின் கமிசன் மிரட்டல் தொடர்கிறதே ஒற்றரே…

ஆமாம் தலைவா…பூட்டு மாவட்டத்தில் ஒரு ஆளும்கட்சி ஒன்றிய செயலாளர் தனக்கு கமிசன் வந்தே தீரவேண்டும் என மிரட்டும் தொனியில் கூற, என்னால் முடியாது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என எகிறி உள்ளார் ஒரு பிடிஒ. அந்த பிடிஓ முக்கியமான சங்கத்தில் பொறுப்பில் வேறு உள்ளாராம்.

Also Read  சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு

சங்கத்தில் பொறுப்பில் உள்ளவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் பாடு திண்டாட்டம் தான் ஒற்றரே..

மிகச் சரியாக சொன்னீர்கள். மாநில சுயாட்சி பேசும் இவர்கள் தான், உள்ளாட்சியில் தன்னாட்சி நடைபெற விடாமல் தடுக்கும் செயலை செய்யும் பெரிய அண்ணன்கள் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.