தனி அலுவலர்
காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது.
எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள் வழக்கமான தேர்தலை நடத்த இயலாது. எனவே, இந்த ஊராட்சிகளில், 2025 ஜூலை 5 அல்லது வழக்கமான தேர்தல் நடத்தப்படும் தேதியில் எது முந்தியதோ, அதுவரை தனி அலுவலர்கள் நியமனம் செய்ய, அரசுக்கு அதிகாரம் வழங்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்
ஜூலை 5ம் தேதியோடு தனி அலுவலர் பற்றிய மசோதாவின் காலம் முடிவடைகிறது.
28 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் கூட தெரியவில்லை. 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஆளும்கட்சி அதிரடியாக ஈடுபட ஆரம்பித்து விட்டது.
2026 சட்ட மன்ற தேர்தல் முடிந்த பிறகு, 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே தேர்தலாக நடைபெறவே வாய்ப்பு அதிகம்.ஆக…மறுபடியும் தனி அலுவலர் காலம் ஆறு மாதம் நீடிக்கவே வாய்ப்பு அதிகம்.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வருமா என்றால்,,,,வாய்ப்பில்லை ராஜா…வாய்ப்பில்லை என்பதே இப்போதைக்கு கிடைக்கும் பதில்.