குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள முகமூடி நபர் யார்? – ஒற்றர் ஓலை

போர்ஜரி செய்துள்ள நபர் பற்றிய விவரம் உண்டா ஒற்றரே…

TNRDOA சங்க லெட்டர் பேடை அவதூறு பரப்புவதற்கு பயன்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மற்றும் காவல்துறை தலைவருக்கும் சங்கத்தின் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுளதாக தகவல் தலைவா…

சங்கத்தினர் சரியான முடிவைத்தான் எடுத்து உள்ளனர் ஒற்றரே…

ஆமாம் தலைவா…சைபர் கிரைம் காவல் பிரிவுக்கு அனுப்பப்படும். வாட்ஸ்அப்பில் முதன்முதலாக பதிவிட்ட நபரை தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடிக்க அதிக வாய்ப்பு உண்டு.அவரை தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவரும் பிடிபடுவார்.

விரைவில் அந்த முகமூடி நபர் அம்பலப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் தானே ஒற்றரே…

கண்டிப்பாக…சங்கத்தின் லெட்டர் பேடை திருட்டுத்தனமாக பயன்படுத்தியது குற்றச்செயல். அந்த குற்றத்திற்கான தண்டனை விரைவில் கிடக்கும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  அமைச்சர் பெயரை பயன்படுத்தியவர் அதிரடியாக இடமாற்றம் - ஒற்றர் ஓலை