ஒரு சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்திய கருப்பு ஆடு யார்? ஒற்றர் ஓலை

வில்லங்கமான விசயமா ஒற்றரே…

ஆமாம் தலைவா….TNRDOA சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக பயன்படுத்தி ஊரக வளர்ச்சித் துறையை களங்கப்படுத்தும் தவறான செய்திகளை டைப் செய்து முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்.

யாருடைய வேலை ஒற்றரே…

வாட்ஸ்அப்பில் வலம் வந்த செய்திக்கும் சங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என மறுப்பு அறிக்கை வந்துள்ளது. அதேவேளையில்,சங்கத்தின்  லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தியது கிரிமினல் குற்றம்.அதனால் சங்கத்தின் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக தகவல் தலைவா…

கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் ஒற்றரே…

சரியாக சொன்னீர்கள் தலைவா…நம்மிடம் பேசிய அனைத்து சங்க பிரதிநிதிகள்,அதிகாரிகள் அனைவரும் அந்த கடிதத்தில் வந்த செய்தியை ஒட்டுமொத்தமாக மறுத்தனர். இதுநாள்வரை நடக்காத நல்ல விடயங்கள் எல்லாம் இந்த இரண்டு வருடத்தில் நடந்துள்ளது என பெருமைபட பேசினர்.

இந்த தவறை செய்தவரை கண்டுபிடித்தே தீரவேண்டும் ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஒரு சங்கத்திற்கு கெட்ட பேர் உண்டாக்கும் இந்த செயல் கிரிமினல் குற்றம். என்ன நடந்தது என்ற விவரங்களை தொடர்ந்து கண்காணிப்போம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இஆப தேவையா? - ஒற்றர் ஓலை