ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் – ஒற்றர் ஓலை

பரபரப்பான குற்றச்சாட்டா ஒற்றரே…

ஆமாம் தலைவா…அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொடர்கதையாகவே உள்ளது. தங்களை பெற்றதும் பெண்ணே என்ற எண்ணம் சிறிதும் இல்லா காமூகர்கள் நிறைந்துள்ளனர்.

நாமும் ஏற்கனவே பேசி உள்ளோமே ஒற்றரே…

ஆமாம் தலைவா…சேலம் வாழப்பாடி, சிவகங்கை தேவகோட்டை என பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பாலியல் சீண்டலைப் பற்றி பல காலங்களுக்கு முன்பே பேசி உள்ளோம்.

இப்போது அச்சு ஊடகத்திலும் செய்தியாக வந்து விட்டதே ஒற்றரே…

திருநெல்வேலி மகளிர் திட்ட இயக்குநர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிப்பட்டு உள்ளது.திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநர்( மகளிர் திட்டம்) மீது இது போன்று குற்றச்சாட்டு தினமலர் டீகடை பெஞ்சில் செய்தியாக வந்துள்ளது தலைவா…

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செய்திகளை சேகரியுங்கள் ஒற்றரே…

கண்டிப்பாக தலைவா…உண்மையாக இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களின் முகத்திரையை தொடர்ந்து கிழிப்போம்.அதே வேளையில் சில இடங்களில் அதிகாரியை பழிவாங்க பொய்யான குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருவதாக என சொல்லி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் இஆப