தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் நடந்து வருகிறதாம் ஒற்றரே…
ஆமாம் தலைவா.,அதிலும் குறிப்பாக தனி அலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் இடமாறுதல் மும்முரமாக நடந்து வருகிறது.
இடமாறுதலில் ஆளும் கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளதாக தகவல் வருகிறதே ஒற்றரே…
ஆமாம் தலைவா…எந்த கட்சி ஆளும் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த நடைமுறையே பின்பற்றப்படும். அதிலும் அரசியல்வாதிகள் பெயரை சொல்லி அதிகாரிகள் விளையாடும் சித்து விளையாட்டும் அரங்கேறி வருகிறது.
என்ன ஒற்றரே…மர்மமாக பேசுகிறீர்கள்.
ஆம் தலைவா…பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளான தேவகோட்டை பாஸ்கரனுக்கு மாவட்ட ஊரக முகமையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது மர்மமாக உள்ளதாம். அமைச்சர் கொடுத்த பட்டியல் என மாவட்ட மந்திரி பக்கம் கை காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
ஒருவேளை உண்மையாக இருக்கலாம் அல்லவா ஒற்றரே..
இல்லை தலைவா…அமைச்சர் பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் நடத்தும் நாடகம் என சிவகங்கை மாவட்ட பத்திரிகை நணபர் என்னிடம் கூறினார் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.