எந்த மாவட்டத்தில் ஒற்றரே..
சிவகங்கை மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதலில் குறிப்பிட்ட ஒரு சங்க நிர்வாகிகள் சொன்னது மட்டுமே நடக்குமாம். இந்த இடமாறுதலில் அது நடைபெறவில்லையாம்.
யார் சொல்கிறார்கள்..
சம்மந்தப்பட்ட சங்கத்தினர் மாநில தலைமை வரை குற்றச்சாட்டாக இதை பகிர்ந்துள்ளனர் தலைவா.சம்மந்தப்பட்ட சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளார்களாம்
எந்த சங்கத்தையும் சாராத நபரை வளர்ச்சி அதிகாரியாக நியமித்தால் மட்டுமே இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்கின்றனர் வேறொரு சங்கத்தினர். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் நிர்வாக தலைவரான திட்ட இயக்குநரின் வேகத்திற்கு ஈடுகொடுப்பவர்களை தேவையான இடத்திற்கு இடமாறுதல் செய்வது அவசியம். அப்போது தான் மாநில தலைமை எதிர்பார்க்கும் செயல்களை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியும்.
சரி தானே தலைவா…மாவட்ட அதிகாரியாக வருபவர்கள் அனைவருக்குமானவராக இருப்பது அவசியம்.இந்த செய்தியை பேசினாலே நம்மீது வழக்கு தொடுப்பது வரை செல்வார்கள்.
பத்திரிகையாளராக பயணப்பட முடிவெடுக்கும் போதே வழக்குகள் வரும் என்று எதிர்பார்த்தே நமது பயணத்தை ஆரம்பித்தோம் தலைவா.்்
மிகச் சரியாக சொன்னீர் ஒற்றரே…உண்மையை உரக்கச் சொல்வோம்.அதனால், வழக்கு வரும் என்றால் வரவேற்போம்.
யாமார்க்கும் குடியல்லோம்…எவருக்கும் அஞ்சோம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.