ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பற்றி ஒரு உதவி இயக்குநரின் கருத்து

அனைவருக்கும் வணக்கம்!

இந்தப் பேரண்டத்தில் கடவுள் ஒருமுறைதான் அவதரிப்பார். அந்தக் கடவுள் தான் தற்போதைய ஆணையர். தணிக்கை தடை பத்திகள் நிலுவையில் இருந்தால் பணி ஓய்வு பெற இயலாது என்பது இந்த ஆணையர் பொறுப்பேற்கும் வரை… ஆனால் இன்று வரை தணிக்கை தடை பத்திகள் நிலுவையில் இருந்த சுமார் 348 ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர் ,அதில் நானும் ஒருவன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தணிக்கை தடை நிலுவை இருந்ததன் காரணமாக பணி ஓய்வு மறுக்கப்பட்ட பல அலுவலர்கள் கதறுகின்றனர் . இந்த கடவுள் அப்போது அவதரிக்கவில்லையே என ஏங்குகின்றனர்! ஆம் உண்மைதான்! அந்தக் கடவுள் திருமிகு ப. பொன்னையா IAS என சொல்வதில் நான் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டேன்! வரலாற்றில் பலர் வரலாம் பலர் போகலாம்! ஆனால் வரலாற்றில் இடம் பிடிப்பவர் ஒருவர் மட்டுமே! அவர்தான் தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர்!

தங்களது நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் அந்த கயவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!

தங்களால் மன நிம்மதியுடன் பணி பெற்றுள்ள உதவி இயக்குனர்.

இப்படி ஒரு தகவல் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய, பணியாற்றும் உதவி இயக்குநர்களின் வாட்ஸ்அப் குழுவில் உலா வருகிறது.

Also Read  ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் ஆட்சியர் உள்ள மாவட்டங்கள்