என்ன தவம் செய்தோமோ – ஒரு வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆச்சர்ய குரல்

ஆணையர்

கடும் குறைபாடு உடைய நிலுவை தணிக்கை தடைகள் காரணமாக, ஒரு மாவட்ட அளவிலான உயர்மட்ட குழுவில் இந்த இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தலா ஒன்பது லட்சம் மற்றும் 12 லட்சம் அபராதம் விதித்து ஆணை இடப்பட்டது.

அதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டதில் தற்போது ஊரக வளர்ச்சித்துறை ஆணையரால் ஒரு லட்சம் அபராதம் என்று குறைத்து ஆணையிடப்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் உதவக் கூடும். உங்கள் அலுவலக இருப்பு கோப்பில் இணைத்து வையுங்கள்.

இப்படி ஒரு தகவல் அனைத்து குழுவிலும் உலா வருகிறது. நம்மிடம் பேசிய ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாவது…

10 லட்சம் கட்ட வந்த உத்தரவை, மாநில உயர்மட்ட கமிட்டியில் ஒரு லட்சமாக குறைத்து ஆணையர் உத்தரவு இட்டுள்ளார்.

இதுபோல, ஆணையர் போட்டுள்ள உத்தரவால் ஊரக வளர்ச்சித்துறையே பயன்பெற்றுள்ளது.

என்ன தவம் செய்தோமோ, அய்யாவை ஆணையராக நாங்கள் பெற்றதற்கு என கண்ணீரோடு பேசினார்.

அவரோடு சேர்ந்து நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

அந்த ஆணை:-

Also Read  வரி வசூலின் இறுதிகட்டம் - உதவி இயக்குநர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுமா?