உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தில் நாம் விடுதலையடைந்தோம்…! என்று சுதந்திர தின விழா கொண்டாடினாலும்.

இன்றளவும் நமது ஆரோக்கியம் ஆங்கிலேயருடைய பிடிக்குள் தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பதை பலரும் உணர்ந்ததாக இல்லை..

உதாரணத்திற்கு சர்க்கரை நோய் பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்க்கலாம்..!

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyurea-excessive and frequent urination).

2. அதிக தாகம் (Polydipsia-dryness of mouth and excessive thirst)

3. அதிக பசி (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

நவீன மருத்துவத்திற்கு அதாவது அலோபதி என்கின்ற ஆங்கில மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால் அந்த மூன்று உடல் மொழிகளையும் (உணர்வுகள்) நோயாக மாற்றிவிடும்..

நீங்கள் அந்த அலோபதி என்கின்ற ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகி அலோபதி சார்ந்த  அனைத்து  “வியாபாரத்திற்கும்” நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!
அடிக்கடி சிறுநீர்கழித்தல், அதிக பசி, அதிக தாகம்… ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை, அலோபதி என்ற ஆங்கிலமருத்துவம் நமக்கு விளக்குவதில்லை!

Also Read  விட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த தவசிக்கீரையின் நன்மைகள்

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

இதுமட்டுமே சர்க்கரை நேய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(ஓர் அறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)

1. எதை சாப்பிடுவது(proper diet)..?

2. எப்படி சாப்பிடுவது (proper eatingtechniques)?

3. எப்போது சாப்பிடுவது (need based diet)?

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

Also Read  ஓர் ஊராட்சி வளர்ச்சியடைய இதைச் செய்தால் போதும்....

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

ஆங்கில மருந்துகளுக்கு குட்பை சொல்லிவிட்டு இதை மட்டும் கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்.

தொகுப்பு:- 

சங்கரமூர்த்தி தலைமை செய்தியாசிரியர்