ஊராட்சி மன்றங்களில் பெண் சுதந்திரம்… சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி பேட்டி..

கிராம ஊராட்சி மன்ற தலைவிகளின் பதவி அதிகாரங்களை பங்கு போடும் அவலநிலையை குறித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க நிறுவனத்தலைவர் கலைச்செல்வி சிறப்பு பேட்டி:-
ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக 50 சதவீத இட ஒதுக்கீடுகளை அரசு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமானளவில் பெண்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.
ஆனால் வெற்றி பெற்ற பெண்கள் தங்களது பதவிக்கான மக்கள் சேவையை சுதந்திரமாக செய்ய முடிவதில்லை ஏனென்றால் அப்பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களின் அதிகார போக்கால் பெண்களின் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நிலை நடைமுறையில் உள்ளது.
ஊராட்சி மன்றங்களில் பெண்கள் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை அவர்கள் சுதந்திரம் அவர்கள் அறியாமலே பறிக்கப்படுகிறது..
இதுகுறித்து உங்களது “டி.என.பஞ்சாயத்து செய்தி” இணையதளம் பலமுறை செய்திகளை வெளியிட்டுள்ளது அதற்கு எங்களது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…

மேலும் கிராம ஊராட்சி மன்ற அவலநிலையை தமிழக தலைமை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும்.
இதுபோன்ற அதிகார தலையீடுகளில் ஈடுபட கூடாது என அரசு ஆணை உள்ளபோதும் அதற்கான அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதே இதற்கு காரணம்… இதுபோன்ற தலையீடுகளின் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கும் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஒரு வீட்டைக் காக்கும் பெண்கள்  நாட்டையும் முன்னேற்ற, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பல்வேறு சாதனைகள் புரிவார்கள் என்பதற்காகதான் பெண்களுக்காக 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நமது அரசு அளித்துள்ளது அதனை சட்டவிரோதமாக பயன்படுத்துவது முற்றிலும் குற்றமாகும் இந்நிலை தொடர்ந்தால்  பின்னாளில் பெண்களின் திறமைகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டு அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகும் அவரவருக்கான உரிமைகளில் பிறர் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும் தடுக்கப்பட வேண்டும் இதனை தமிழக அரசு முறையாக கண்காணித்து குறுக்கீடுகள் செய்பவரை கடுமையாக தண்டிக்கும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் பேணிக்காக்க வேண்டும் என்றார் கலைச்செல்வி..

Also Read  அமைச்சரோடு உள்ளாட்சி ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

பேட்டி:- சங்கரமூர்த்தி, தலைமை செய்தியாளர்