கிராம வளர்ச்சிக்காக திருமணம் செய்ய மறுத்த பெண்… ஆக்‌ஷனில் இறங்கிய அரசு!

‘சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என பெண் ஒருவர், முதல்வருக்கு எழுதிய கடிதத்தால், அந்தக் கிராமத்துக்கு தற்போது விடிவு பிறந்துள்ளது.

தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம். இந்த கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லை. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அத்துடன் இணையதள வசதி, செல்போன் சேவையும் அங்கு இல்லை. முறையான சாலை இல்லாததால் பஸ்களும் இதுவரை அந்த கிராமத்திற்கு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நாள்தோறும் பல சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். தனது கிராமத்தின் நிலையையும், மக்களின் சிரமங்களையும் கண்கூடாகப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிந்து என்ற இளம்பெண் அதிருப்தி அடைந்தார்.

தனது கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கோரி பிரதமர், கேரள முதல்மந்திரிக்கு கடிதம் எழுதினார். அதற்கு கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் பதில் கடிதம் அனுப்பினார். அதில் விரைவில் உங்கள் ஊரின் பிரச்சினைகள் தீர்வு காணப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் இதுவரை எச்.ராமபுரா கிராமத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த இளம்பெண், தனது ஊருக்கு முறையான வசதிகள் கிடைக்கும்வரை, தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்திருந்தார். இது, கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த கிராமத்தை தேவனாகிரி மாவட்ட துணை ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த கிராமத்தின் மோசமான சாலையால் அவர் கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரம் நடந்தே சென்றார். இதையடுத்து சாலை வசதியை ஏற்படுத்தித் தர உள்ளூர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  பசுமை வீடு திட்டம் யாருக்குக் கிடைக்கும்? அரசின் மானியம் எவ்வளவு?