அதிமுக-சசிகலா-குருமூர்த்தி, நடப்பது என்ன?

ஜெ மறைவுக்கு பிறகு பல அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தது அனைவரும் அறிந்ததே.

சசிகலா என்ற ஒற்றை பெண்மணியை அரசியலைவிட்டே அகற்ற குருமூர்த்தி அரங்கேற்றிய பல முயற்சிகளை பார்த்தோம்.

பன்னீரின் தர்மயுத்தம்,சசிகலாவுக்கு பரப்பனா அக்ரஹாரம், தினகரனுக்கு திகார், பன்னீர்,பழனிச்சாமி இணைப்பு என அனைத்திலும் குருமூர்த்தியின் துக்ளக் தர்பார் தொடர்ந்தே வந்தது.

நம்பிய ரஜினி ஏமாற்றிய பிறகு, திமுகவை வீழ்த்த சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று இன்று நடந்த துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசி உள்ளார்.

ஆக…ஆக…திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த முடிவையும் எடுப்பதற்கு குருமூர்த்தியும்,பாஜகவும் தயாராகிவிட்டது.

சசிகலாவை இணைக்காவிட்டால் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக அவுட் என்று மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கை தான் காரணம் என்றார் மூத்த பத்திரிகையாளர்.

தை முதல் நாள் முதலே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

Also Read  தேனிக்கு மீண்டும் ஒரு புதிய திட்டம் - கலக்கும் துணை முதல்வர்